März 28, 2025

மணி கைது! இனவாத நடவடிக்கை! பாசிசம் ஆட்சியின் நகர்வு! கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் ட்டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மணிவண்ணனின் கைது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விலை செய்ய வேண்டும். மணிவண்ணனில் கைது நடவடிக்கை ஒரு இனவாத நடவடிக்கை என்றும், அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.