März 28, 2025

வவுனியாவில் இளைஞர் குழு மோதல்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தி விட்டு வந்த இளைஞர் குழு ஒன்று மதுபானசாலைக்கு முன்பாக இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அதன் உரிமையாதளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், அருகில் இருந்த வர்த்தக நிலையங்களில் நின்றோர் மற்றும் வீதியில் நின்றோரையும் அச்சுறுதியுள்ளது.

இதன்போது அப்பகுதியில் ஏற்பட்ட அடிதடி மற்றும் கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.