நமக்கு நாமே கொள்ளி


அவர்களது நிபந்தனைகளின் படி;
1. இலங்கையில் உயிர்வாழ்வதற்குரிய தகுந்த சூழல் இல்லையெனத் தஞ்சம் புகுந்து, வதிவிட அனுமதி பெற்று, மீளவும் அதை இலங்கைக் கடவுச்சீட்டுக்கு மாற்றிக்கொண்டு, விடுமுறைக்கு இலங்கை செல்கிறார்களெனின், அவர்களது ஆரம்ப வாக்குமூலம் பொய்யானதா ?
2. 2009 இன் பின்னர் இலங்கையில் உயிர் வாழ முடியாதென்று இங்கு வந்தவர்களில், 60 வீதமானோர் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள். இதன்போது அவர்களுக்கு அங்கே உயிரச்சுறுத்தல் இல்லையா ?
3.யேர்மனியின் குடியுரிமை பெற்றநபர் இலங்கை செல்லும்போது , ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அவர்கள் இலங்கையிலுள்ள யேர்மனியத் தூதுவராலயத்தில் பதிவுசெய்யமுடியும். ஆனால் இலங்கைக் கடவுச்சீட்டில் யேர்மனிய வதிவிட அனுமதி பெற்றவர் இலங்கை செல்லும்போது ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படின் அவர் இலங்கையராகவே கணிக்கப்படுவார், அது தெரிந்தும் அச்சமின்றிப் பயணிப்பதன் பொருள் என்ன ?
இன்று சட்டவாளர்கள் சிலருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளே இவை. இவற்றில் எந்தக்கேள்விக்கும் பதிலளிக்க இயலவில்லை. நம்மில் சிலரது „சுயநலப்போக்குகள்“ யேர்மனிய அரசால் நன்கு அவதானிக்கப்படுகிறது.
இன்று அப்பாவித் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதில் இவ்வாறான காரணங்களும் அடங்கும்.