März 28, 2025

யாழில் கூலிக்கொலைகள்!

யாழ்.குடாநாட்டில் பாதாள உலக கொலைகள் வேகமாக அரங்கேறிவருகிறது.

இதன் நீட்சியாக வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் வசித்து வந்த ஒருவர் வெட்டிக் கொலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது புத்தூர் வீரவாணி பகுதியை சேர்ந்த துரைராஜா சந்திரகோபால் (வயது-52 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

தனிப்பட்ட கோபதாபத்திற்கான கொலையாக இக்கொலை சொல்லப்படுகின்ற போதும் திட்டமிட்ட பாதாள உலக கும்பல் மூலம் அரங்கேற்றப்பட்ட கொலையாக பார்க்கப்படுகின்றது.