März 28, 2025

மக்கள் எதிர்ப்பால் நிலாவரையில் கைவிடப்பட்டது அகழ்வாரய்ச்சி

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிறுத்தப்பட்டிருந்த குறித்த அகழ்வாராட்சியானது இன்றைய தினம் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீண்டும் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த மக்கள் அப்பகுதிக்கு விரைந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதனால் அங்கு குழப்பமும்  பதற்றதுதட நிலவியது.

மக்களின் எதிர்ப்பை அடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.