Mai 13, 2025

ஒத்தைக்கு ஒத்தை: ஆவா அருணுக்கு சவால்!

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சவால் விடுத்துள்ளான் யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன்.

தமிழ் தரப்புக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களிற்கு எதிராக மீண்டும் தாமும் போலி போராட்டங்களை நடத்துவது சிங்கள ஆட்சியாளர்களது உத்தியாகியுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணிக்கு போட்டியாக தெய்வேந்திரமுi முதல் பருத்தித்துறை வரை பேரணியொன்றை நடத்த அரசு இத்தகைய கும்பலை வைத்து முயன்றபோதும் அது பிசுபிசுத்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் நல்லூர் பின்வீதியில் புலிகளால் கடத்தப்பட்டவர்களை தேடுவதாக இன்றைய தினம் இராணுவம் கொட்டகை அமைத்து வழங்க போராட்டமொன்று பத்திற்கும் குறைவானவர்களை வைத்து நடத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் அதனை வேடிக்கை பார்த்த பல்கலைக்கழக மாணவன் ஒருவனை இலங்கை காவல்துறை மூலம் கைது செய்ய முற்பட சவால் விடுத்தான் ஆவா அருணை அவன்.