März 28, 2025

மட்டக்களப்பில் தடை தாண்டி பேரணி!

மட்டக்களப்பில் முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களது பேரெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்த அழைப்பின் பேரில் மதத்தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் பேரணியில் பயணித்திருந்தன.

பேரணிக்கான அழைப்பினை அதன் ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சிவயோகன் ஆகியோர் விடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடு;க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.