Mai 12, 2025

செல்பி பிள்ளை:நல்லூரிலும் செல்பி பிள்ளை!

யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணா நோன்பிருக்கின்ற மாணவர்களிற்கு இந்திய தூதரை சந்திக்க வந்தவேளை ஆதரவு தெரிவித்துள்ளனர் சிறீதரனும் அவரது தொண்டர்படையினரும்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதர் சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றவர்களது தொண்டர் படையினரை சந்திக்க அழைத்திருந்தனர்.

அதனில் பங்கெடுக்க வந்திருந்த வேளையிலேயே  சிறீதரனும் அவரது தொண்டர் படையினரும் நல்லூரிற்கும் வருகை தந்து செல்பி எடுத்துக்கொண்ட பின்னர் கிளிநொச்சி திரும்பியிருந்தனர்.

ஆயினும் சுமந்திரன் தொண்டர்படையினர் நல்லூரிற்கு வருகை தரவில்லை.

இதனிடையே இந்திய தூதரை சந்திக்க வந்திருந்த செல்வம் அடைக்கலநாதன் தொண்டர்படையினை சேர்ந்த ஒருவர் சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.