Oktober 23, 2024

இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை!

முஸ்லீம்களிற்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனவாதிகளது எதிர்ப்பினால் பிசுபிசுக்க தொடங்கியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரது உரையை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இருநாள்கள் தங்கியிருப்பார்,ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார்.

இதனிடையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன்  தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர் என்பதால், அந்தத் தாக்குதலைப் போன்ற தாக்குதல்கள் நாளையும் நடக்கலாம் எனத் தெரிவித்த பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

‚தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்.

ராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, அதை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்‘ என்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கும் என மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எம்மைப் குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம் எனக் கேட்டார். அத்துடன்,  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. அதனால், எதையும் எளிதாக விட்டுவிடமாட்டோம் என்றார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர்.  இந்த அரசியல் தலைவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், நடந்த விடயங்கள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

நேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே அவர் நீதியமைச்சர் மாத்திரமே என்றார்.