பிரான்சில் கொரோனாவை கொல்லும் முகக்கவசம் கண்டுபிடிப்பு!

French President Emmanuel Macron is seen on a screen as he attends by video conference a round table for the National Humanitarian Conference (NHC), taken at the Foreign Ministry in Paris,Thursday, Dec. 17, 2020. French President Emmanuel Macron tested positive for COVID-19 Thursday following a week in which he met with numerous European leaders. (Charles Platiau/Pool via AP)
கொவிட் 19 வைரசினை அழிக்கும் முகக்கவசத்தினை பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Lille நகரைச் சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதுவரையான முகக்கவசங்கள் போல் இல்லாமல், கொவிட் 19 வைரசிடம் இருந்து உங்களை பாதுகப்பதோடு, கொவிட் 19 வைரசினை அழிக்கும் திறனும் கொண்டதாக இந்த முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பொது சுகாதார துறைக்காக BioSerenity எனும் நிறுவனம் இந்த முகக்கவசங்களை தயாரிக்க உள்ளது. விரைவில் பொதுமக்கள் பாவனைக்கு இது வரும் எனவும், ஒருதடவை மாத்திரமே பயன்படுத்தக்கூடிய இவ்வகை முகக்கவசங்களை அதிகபட்சமாக 4 மணிநேரங்கள் அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரசினை அழிக்கும் திறன் கொண்டது என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி இந்த முகக்கவசத்திற்கு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.