März 28, 2025

பச்சை குத்த அனுமதி வேண்டுமாம்?

பாடசாலைக்கு பச்சை குத்தி வர அனுமதிக்கவில்லையென பாடசாலை மாணவர்கள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ் – வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தரம் 11இல் பயிலும் 70 ஆண் மாணவர்களை பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடம் ஒன்றுக்கு  அழைத்த ஆசிரியர்கள், மேல்  ஆடைகளை களையுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர்களின் அறிவுறுத்தல் தொடர்பில்

மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.