März 28, 2025

மக்கள் எழுச்சியே பேரணி!

சில்லறை தனமா செயற்பாடுகாளல் மக்களை சிலர் குழப்ப முற்படுகின்றர்.மக்களது ஒற்றுமையினை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பினை விடுத்துள்ளார் வணபிதா லியோ அடிகளார்.

அதேவேளை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட போராட்டம். 2009 க்கு பிறகு தாமாக கிளர்ந்தெழுந்த போராட்டத்திற்கு தனிநபர்களோ கட்சிகளோ நாமோ உரிமை கோர முடியாது.

ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு பலம் சேர்த்தது. குறிப்பாக சாணக்கியனின் துணிச்சலை மெச்சுகின்றோமென தெரிவித்துள்ளார் வேலன் சுவாமிகள்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் வேலன் சுவாமிகள் மற்றும் வணபிதா லியோ அடிகளார் கருத்துக்களை வெளியிட்டதுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க அங்குரார்ப்பணத்தையும் அறிவித்துள்ளனர்.