Oktober 23, 2024

இன்று, இலங்கைக்கு இந்தியா வைத்த திருப்பதி நாமமா அல்லது கடந்த வாரம் இந்தியாவிற்கு இலங்கை வைத்த சீனநரி தந்திரமா !!!

இலங்கை, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றது. அந்தக் கடனை 2022 நவம்பர் மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டியதை, உடனடியாக செலுத்தும் படி இந்தியா இலங்கைக்கு, இன்று அறிவித்துள்ளது !
இந்தியாவுடன், கொழும்பு கிழக்கு துறைமுக ஒப்பந்தத்தில் கையப்பம் இடமாட்டொமென்று இலங்கை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, முழுக் கடனையும் தீர்க்குமாறு இந்தியாவின் கோரிக்கை வந்ததாக, இலங்கையின் நிதி அமைச்சக அதிகாரிகள் செய்தியை கசிய விட்டுள்ளார்கள் !
சிங்கள பெளத்த கொள்கை வகுப்பாளர்கள் ஒரு பொழுதும் இந்தியாவை ஆதரிக்க மாட்டார்கள் மற்றும் சீனாவோடு தான் தங்களின் மறைமுக காதல் உறவை வைத்திருப்பார்களென்று, பல வருடமாக இலங்கைத் தமிழர்கள் சொல்லி வருகின்றார்கள். அதை இந்தியா தெரிந்தும் தெரியாமலுமாக இருப்பதால் தான், இன்று சீனாவின் ஆதிக்கம் முழு இலங்கைக்குள் இருக்கின்றது !
இலங்கையில் வாழும் தமிழர்களால் மட்டுமே, இந்தியாவின் தென் கோடியான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பாதுகாப்பு என்பதை, மறைந்த இந்திரா காந்தி அம்மையார் தெளிவாக புரிந்து வைத்திருந்தார் !
இந்திய – சீனா, இந்திய – பாக்கிஸ்தான் போர் காலங்களில், இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டதையும் மற்றும் 10 லட்சம் மலையகத் தமிழ் உறவுகளிற்கு குடியுரிமை கொடுக்காது நாடுகடத்த, சிங்கள பெளத்த கொள்கை வகுப்பாளர்கள் எடுத்த பல முடிவுகளால், இந்திரா அம்மையார் கடுங்கோபத்தில் இருந்த வரலாற்றையும், தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !
இலங்கையின் தென் முனையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொடங்கி, கடந்த வாரம் யாழ் வடக்கில் உள்ள சிறு தீவுகளில்(கச்சைதீவிற்கு அருகாமை), தன் ஆதிக்கத்தை செலுத்துகின்ற சீனாவால், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பார்களோவென்ற சந்தேகம் ஏற்படுகின்றது !
ஈழத் தமிழர்களின் போராட்டம் இருக்கும் வரை, இந்தியாவின் தென் இந்து சமுத்திரத்திற்குள் வல்லரசுகளின் ஆதிக்கம் இருக்கவில்லை, அது இந்தியாவிற்கு பலமாக இருந்தது. ஆனால், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு அந்த நிலைமை தலைமாறாக மாறியுள்ளது. அதை இந்தியா சரியாக புரிந்து கொண்டால், வெகு விரைவில் ஈழத் தமிழர்களின் முழு ஆதரவோடு, இந்தியாவின் ஆதிக்கம் இலங்கைக்குள் கால் ஊன்றும் !
இந்தியாவிற்கு, முக்கோண வடிவில் கடல் வலையை போட்டிருக்கும் சீனாவின் துறைமுகங்களான (பாகிஸ்தானில் உள்ள கைதராபாத், இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை மற்றும் மியன்மாரில் உள்ள Kyaukpyu). இந்த முக்கோண கடல் வலையை அறுக்க வேண்டுமாயின், ஈழத்தமிழர்களின் உதவி இந்தியாவிற்கு தேவை, இந்தியாவின் உதவி ஈழத் தமிழர்களிற்குத் தேவை !!!!
இல்லாதுவிட்டால், இலங்கைக்கு சீனா பெரும் தொகையான பணத்தை கடனாக கொடுத்துக் கொடுத்து, சட்டபூர்வமாக முழு இலங்கையும் சீனாவின் காலனியாக மாறிவிடும். அதன் பிறகு, இலங்கைத் தீவை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது ! நன்றி தினப்புயல்
Lokeswaran Pushparaj and 6 others
1 Comment
Like

Comment