März 29, 2025

ஆணைக்குழு பம்மாத்து:மாவை முதலமைச்சர்!

தமிழ் மக்களது முக்கிய பிரச்சினையான அடுத்த வடமாகாண முதலமைச்சர் யாரென்பதற்கு தமிழரசு முடிவு கண்டுள்ளது.இதன் பிரகாரம் மாவை சேனாதிராசாவை அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சிஅலுவலகமாகிய தாயகத்தில் இன்று இடம்பெற்றது.

அக்கூட்டத்திலேயே மாவை சேனாதிராசாவை அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி கோத்தபாயவின் புதிய ஆணைக்குழு உருவாக்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகமே. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலேயே நாம் எவ்வளவோ தூரம் முன்னேறமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.