März 28, 2025

ஒருபுறம் மூழ்கடிப்பு:இன்னொருபுறம் வலையறுப்பு?

ஒருபுறம் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மூழ்கடிக்க மறுபுறம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று புதன்கிழமை  அதிகாலை நடைபெற்றுள்ளது.

பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் தொழிலுக்குச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்தது என்றும் ஒரு மீனவரின் 20 வலைகளை, இந்திய மீனவர்கள் அறுத்து எடுத்து சென்றதாக மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.