März 28, 2025

இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெயசங்கர் – அமைச்சர் டக்ளஸ் இடையில் விசேட சந்திப்பு !

இந்திய வெளி விவகார அமைச்சர் டொக்டர் ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (06.01.2021)  மாலை நடைபெறவுள்ளது.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் விசேட சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த 29 ஆம் திகதி தொலைபேசி ஊடாக இந்திய மற்றும் இலங்கை  கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய நிலையில் நாளை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது