Mai 12, 2025

சமத்துவகட்சியை விழுங்கும் ஈபிடிபி?

ஈபிடிபி கட்சி தனது கால்களை கிளிநொச்சியில் ஊன்ற தொடங்கியுள்ள நிலையில் டக்ளஸின் முன்னாள் சகபாடியான சந்திரகுமாரின் அரசியல்

இருப்பு கேள்விக்குள்ளாகிவருகின்றது.கிளிநொச்சியை தலைமையாகக் கொண்ட சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் (சமத்துவ கட்சியின்) பொருளாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமச்சந்திரன் மீண்டும் ஈபிடிபியினில்; இணைந்துள்ளார்.

ஏற்கனவே கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி சமத்துவ கட்சி பலவீனமடைந்துள்ள நிலையில் தற்போது ஈபிடிபியுடனான இணைவு ஆரம்பமாகியுள்ளது.