März 28, 2025

எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா?

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30.12.2020) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் கரிசனை கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்வைத்திருந்தனர்.

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?, தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.