Mai 12, 2025

ஜனாஸா விவகாரம்:யாழிலும் போராட்டம்?

கிறிஸ்மஸ் தினமான இன்று இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில்தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ், யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய கொரோனா நிலைமையின் காரணமாக சமூக இடைவெளியினை பின்பற்றி ஜனஸா எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுலோகங்களை தாங்கி நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.