März 28, 2025

அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்கள் STS தொலைக்காட்சியில் சுரேஸ் கலந்து கொண்ட கலைஞர்கள் சங்கமம்பற்றி பார்வை!

கலைஞர் சுரேஸ் உங்களுக்கும். நேர்காணல் கண்ட மூத்த ஊடகவியலாளர் மோகனுக்கு. எம்மவர் STS தொலைக்காட்சி தேவராசாவுக்கும். முதலில் வாழ்த்துக்கள்,
எம்மவர்களை உலகறிய வலம்வர பதிவுசெய்வதில் நாம்மகிழ்ச்சி கெள்கிறோம் ,

இன்றைய நேர்காணல் கலைகலைஞர்களது வேதனைகள் பற்றிய குறைநிறைகளை கூறியுள்ளார்கலைஞர் சுரேஸ்,

எம்மவர்களை, எமது கலைஞர்களை, எம்மவர்கள் மதிப்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது,

ஒரு நிகழ்வாகட்டும், ஒரு திரைப்படமாகட்டும், அதைநடத்திட பெரும்பாடுகள் ஏற்ப்படுகிறது ,

அந்தநிகழ்வில் பங்குகொள்வோர்கள் பொதுவீதியில் நின்று விளம்பரம் செய்யும் காலம் மாறவேண்டும், கலைஞர்களை மதிக்கவேண்டும் எல்லாத்திறமைகளும் எம்மவர்களிடம் உண்டு,

திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் பிறகலைஞர்களை நன்றாக மதிக்கவேண்டும், இனிவரும் காலங்களிலாவது நாம் ஒன்றுசேர்ந்து நம்கலைஞர்ளையும் மதிப்போம் கலைகளையும் வளர்ப்போம்!