März 28, 2025

வன்னிக்கு வருகின்றது கண்டம்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி புயலானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே 236 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. முதலே குறிப்பிட்டது போன்று இது முல்லைத்தீவினை அண்மித்தே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கிடைத்துவரும் மழை இன்று நண்பகலுக்கு பிறகு கனமழையாக மாறும் வாய்ப்புண்டு.

புயல் கரையைக் கடக்கும் வேளை பரவலாக இடிமின்னலுக்கு வாய்ப்புண்டு.வவுனியாவின் பல பகுதிகளும் குறிப்பாக வவுனியா தெற்குப்பகுதி புயலின் முழுச் செல்வாக்குப் பகுதிக்குள் வருவதனால் காற்றின் வேகம் உயர்வாக இருக்கும் என்பதுடன் மிகக் கனமழையும் பொழிய வாய்ப்புண்டு. ஆகவே இப்பகுதி மக்கள் நாளை பகல் 2.00 மணியிலிருந்து மிகக் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

1.பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆவணங்களுடன் தயாராக இருக்கவும்.

2.தகரக்கூரைகளை உடைய வீடுகளில் வசிப்போர் கூரைகளைப் பலப்படுத்தவும். அல்லது பாதுகாப்பான உறவினர்களின் வீடுகளில் தங்கவும்