März 28, 2025

தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்ட கொரோன பாதிப்பு. இன்று 1,404 பேருக்கு மட்டுமே!

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,18,33,957 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 4 பேர் உள்ளனர். இதுவரை  7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 10 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,411 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,60,750 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.