März 28, 2025

பகுதியளவில் திறக்க அனுமதி?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளி தெரிவித்தார்.

இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காரைநகர் வாசி சென்ற போது கடமையிலிருந்த 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரத்தில் இன்றைய தினம் 33 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.