März 28, 2025

கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு ஒருவர் பலி!

பருத்திதுறை – கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கல் அழுத்தும் இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.