März 28, 2025

கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் வெளியே?

கூட்டமைப்பின் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் பதவி விலகுவதாக கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு சுழற்சி முறையில் தவிசாளர் பதவியை வழங்க தீர்மானித்த போதும் சுமந்திரனின் ஆதரவின் பின்னணியில் பதவியை விட்டுக்கொடுக்க ஜங்கரன் பின்னடித்து வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டைய வரவு செலவு திட்டத்தில் ஒருவாறாக தப்பித்த அவர் இம்முறை தோற்கடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து முன்னதாகவே அவர் பதவியை விலக முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.