März 28, 2025

20:விவாதம் ஆரம்பம்-றிசாத்தை காணோம்?

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை  நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளதாக கூறினார்.

இதன்போது, எழுந்துநின்ற நாடாளுமன் உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, அவ்வாறென்றால் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அவரை அழைத்து வருமாறு கோரினார்.

அதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் ரிஷாட் பதியுதீனுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, இது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.