März 28, 2025

மணி, மயூரனை நீக்க கோரியது முன்னணி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.