März 28, 2025

தனித்து போகின்றதா டெலோ?

கூட்டமைப்பு குழப்பங்களால் மாகாணசபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக அக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழரசு தலைமைக்கு மிரட்டல் விடுவதற்கே இம்முயற்சி நடப்பதாக சில தரப்புக்கள் மறுத்துள்ளன.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பதவி நிலை போட்டி தொடர்ந்து வரும் நிலையில் டெலோ மற்றும் புளொட் கட்சிகளுக்கு ஊடக பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளை வழங்க தமிழரசுக்கட்சி பிடிவாதமாக மறுத்து வருகின்றது.

அண்மையில் நடந்த பாராளுமன்ற குழு கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் நிலைக்கு குறித்த விடயம் சென்றிருந்தது.

இந் நிலையில் தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை தொடர்ந்தும் ஏற்க முடியாது என தெரிவித்த டெலோ முக்கியஸ்தர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு இருந்தாலும் டெலோ தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கேதுவாக தற்போது தனித்து செயற்படும் சிவாஜிலிங்கம் -சிறீகாந்தா தரப்புக்களுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.