Mai 13, 2025

வடக்கு மாகாண சாரதிகள் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்!

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சாரதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் தொடராக தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.