Mai 13, 2025

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை விந்தியா துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முன்னதாக முதல்வர் பழனிசாமியை சந்தித்த அவர் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறினார்.