März 28, 2025

களவு? போராட்டத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொரோணா காலத்தில் இடம்பெற்ற களவுகள்  தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுக்கு எதிராக தொழிற்சங்கம்  செயப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.