März 28, 2025

தமிழரசு போக்கிலித்தனம்:வீதியில் முன்னாள் போராளி,பிள்ளைகள்!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி இன்றிரவு தாக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த கோணேஸ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வசித்த வந்த வீடு உடைக்கப்பட்டுமுள்ளது.

கூட்டமைப்பு ஆளுகைக்குட்பட்ட கரைச்சி பிரதேச சபை தவிசாளரது முழு ஆதரவில் அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன. இப்பொழுது இரண்டு பிள்ளைகளுடன் அவர் தெருவில் விடப்பட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட கணவனும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியென தெரியவருகின்றது.
குறித்த பெண் போராளியை பாலியல் ரீதியில் நள்ளிரவில் தொடர்பு கொண்டு  குறித்த பிரதேசசபை தலைவர் அச்சுறுத்தியமையினை அம்பலப்படுத்தியதனால் தனக்கு இந்த நிலைமை பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் வசித்து வந்த காணியை விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டு காலத்தில் அதன் உரிமையாளர் விற்பனை செய்திருந்தார்.
எனினும் தற்போது அதனை புலிகள் பலாத்காரமாக ஆக்கிரமித்திருந்ததாக கூறி உரிமை கோரி வருகின்றார்.
இதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வலது கரமான குறித்த தவிசாளரே உள்ளமை குறிப்பிடத்தக்கது.