Oktober 22, 2024

அவ்வளவு தான் போங்கள்: யாழ் சிவில் நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்கு போகிறது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இராணுவச் சிப்பாய்கள் கடமைக்கு அமர்த்தப்படுவர். எனவே யாழில் சிவில் நிர்வாகம் என்பது முற்றாக இல்லாமல் போய் சிங்கள ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளது.

சிங்கள ராணுவக் கைக்கூலிகளாக தான் ஆவா குழு செயல்பட்டு வருகிறது. இதனை போன்ற பல அமைப்புகளை ராணுவமே உருவாக்கி, தற்போது யாழில் குற்றச்செயல் அதிகரித்துள்ளது என்று காட்டி, சிவில் நிர்வாகத்தை தமது கைகளில் எடுத்துள்ளது.