
பல்லின மக்கள் வாழ்கின்றதும் பல பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக வருகைதருவதுமான மூதூர் நகர் பகுதியில் இன்றைய தினம் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசங்கள் இல்லாமலும் அதிகளவிலானோர் கூட்டம் கூடி நிற்பதைக் காணமுடிகிறது.5 பேர் சமூக இடைவெளியின் பிரகாரம் கூடினாலே விரட்டியடிப்பதற்காக ஓடி வரும் காவலர்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் யாரையுமே இங்கே காணமுடியவில்லை.மூதூர் சுகாதார வைத்தியஅதிகாரி அவர்களே …மூதூர் காவல் துறையினரே பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களே மற்றும் மூதூர்பிரதேசசபையினரே இது உங்களின் கவனத்துக்கு …பொது மக்கள் போக்கு வரத்துச் செய்யும் நெரிசலான வீதியில் சந்தை அமைத்து நெருசலை ஏற்படுத்தும் நிலையில் நாடு தற்போது சீரடைந்து விட்டதா …..?