Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மைத்திரிக்கு சிறைத்தண்டனை வழங்குங்கள்

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள் யாழ்.பல்கலை முன் போராட்டம்

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நண்பகல் யாழ்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிஐடியிடம் வாக்குமூலம் அளித்துள்ள மைத்திரி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக...

நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள் – கனடாவில் அநுர அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றாக்கக் கூடிய  அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்...

அமெரிக்காவின் பி-1பி பொம்பரை விரட்டியது ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள்

ரஷ்யாவின் பேரண்ட்ஸ் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க B-1B குண்டுவீச்சு விமானத்தை நெருங்கி வருவதைத் தடுக்க MiG-31 போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம்...

இலங்கை – இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க...

ரெலோவின் 11வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.  கட்சியின் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து...

இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த பண்ணையாளர்களை சந்தித்தார்.

2024/03/22 இன்று வெலிக்கந்தை மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த அவர்கள் மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு பயணம் செய்து நிலமைகளை ஆராய்ந்த பின் வெலிக்கந்தை மகாவலி...

ரஷ்யாவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 40 பேர் பலி! 100க்கு மேற்பட்டோர் காயம்!!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு புறநகரில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் இசை அரங்கில் கூடியிருந்த மக்கள் மீது ஆயுதம் தாக்கிய ஆயுததரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40...

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டுச் சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அறுவைச் சிகிற்சை மூலம் 62 வயதுடைய மனிதனுக்கு மாற்றியுள்ளனர் அமெரிக்க நிபுணர்கள். மார்ச் 16 அன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர...

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன!!

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்து தடுத்துள்ளன. பணயக்கைதிகள் உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தத்திற்கு...

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும்,...

ஜனாதிபதி யாழ்.வந்து சென்ற செலவு 11 இலட்ச ரூபாய்

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் ,...

காந்தி தேசமே உன் நீதி எங்கே ? யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும்

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த...

இந்திய எதிர்ப்பு வருத்தம் முற்றுகிறது!

இந்திய அரசிற்கெதிராக மனோநிலை தெற்கு வடக்கு பாகுபாடின்றி இலங்கையில் உச்சமடைந்துள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட...

வெங்காயம்:சீனாவிடம் சரண்!

 இலங்கையில் சாதாரண மக்களிடையே அன்றாடம் ஆட்டிப்படைத்துவரும் வெங்காயப்பிரச்சினையில் இந்தியா கைவிட்டுள்ள நிலையில் அரசு சீனாவிடம்  கையேந்தியுள்ளது. சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் ஐந்து நாட்களில்...

தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்

தமிழ் கலாசார இனவழிப்புக்காக பெளத்தமயமாக்கலை ஆயுதமாக்குதல்!!தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாரி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது சிறீலங்கா பொலிஸ் வன்முறையை இம்மாதம் எட்டாம் திகதி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள வடகிழக்கானது வரலாற்று ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களான தமிழர்களின் தாயக பிரதேசம் ஆகும். சிறீலங்கா பொலிஸானது எட்டுப் பேரைக் கைது செய்துள்ளதுதலைமுறைகளாக தமிழ்ப் பக்தர்களின் வழிபாட்டிடமாக வெடுக்குநாறி இந்து ஆலயம் இருந்து வருகின்றது. சிறீலங்கா தேசத்தின் நடவடிக்கையானது அடிப்படை உரிமையொன்றான இந்துக்களின் வழிபாடு செய்யும் உரிமையை மிக மோசமாக மீறுகிறது. “பக்தர்களின் கைதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பெளத்தத்த மதத்தை பலப்படுத்துவதற்காக சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் இந்து மதத்தையும் , ஏனைய மதங்களையும் நலிவற்றத்தாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என உறுதிமொழி வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.தொல்லியல் அடையாளங்களை பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் தமிழ் அடையாளங்களை அழித்தலில் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசானது களமிறங்கியுள்ளது. தொல்லியல் சட்டமானது எந்தவொரு வரலாறு, சமூக மற்றும விஞ்ஞான ஆராய்ச்சி இல்லாமல் எந்தவொரு இடத்தையும் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்த தொல்லியலுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியிலான தமிழர் தாயகமான சிறீலங்காவின் வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 1,500 இடங்களை பெளத்த இடங்களாக அடையாளப்படுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழர் தாயகத்தில் 1970களில் இவ்வாறான ஏறத்தாழ 2,000 நிலையங்களை அடையாளங்காண சிங்கள பேரினவாதி அமைச்சர் சிரில் மத்தியூ திட்டமிட்டிருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.தமிழர் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொள்ள, தமிழ் மரபை, தமிழ் அடையாளத்தை அழித்து கலாசார இனவழிப்பை மேற்கொள்ள பெளத்த இடங்களை ஆய்தமாக்க சிங்கள பெளத்த பேரினவாதம் பாவிக்கிறது. பெளத்த இடத்தை அடையாளப்படுத்தல், காப்பாளரொருவராக சிங்களப் பிக்கு ஒருவரை நியமித்தல், இடத்தைப் பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை தரையிறக்கல் தொடர்ந்து சிங்கள விவசாயிகள் குடியேறுதல் என்பன சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் ஆகும். இந்த நிகழ்ச்சி நிரலே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது.பெளத்தத்தை முன்னெடுப்பதற்கு சிறீலங்காவுக்கு 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு நவம்பரில் இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தது. 1987 இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் “பெளத்த தடங்களை அடையாளங்காண” அல்லது மீளமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையானது பயன்படுத்தப்படமாட்டாதென உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டுகிறோம்.சிறீலங்காவின் வடகிழக்கு பகுதி சிங்கள மயமாக்கலைத் தடுப்பது அறஞ்சார் கட்டாயம் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குக் கட்டாயமும் ஆகும். பிரதமர் பணிமனை,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.pmo@tgte.org-- Shanthini Sivaraman, Minister of Media, TGTE, 416-830-4305 media.team@tgte.org

தேர்தல் தாமதமாகும் அபாயம்

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதி

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

உக்ரைனின் ஓர்லிவ்கா கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் ஓர்லிவ்கா (Orlivka) கிராமத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஓர்லிவ்கா கிராமத்தை, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள...

திரு உருத்தின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 20.03.2024

யேர்மனி வூல்வன்பிற்நகரில் நகரில் வாழ்ந்து வரும் திரு. உருத்தின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளையுடனும் உற்றார் ,உறவுகளுடனும் கொண்டாடுகின்றார் இவர் சீரும் சிறப்புமாக...