April 27, 2024

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலநேரத்தில்  நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 84 மில்லி மீற்றர் மழை வீழ்சியானது  யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

வீசிய கடும் காற்றின் காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணபவானந்த  வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்து வகுப்பறை சேதமடைந்துள்ளது குறித்த மரமானது யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது

எனினும் கடந்த 24 மணித்தியாலத்திற்கு வளிமண்டல திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில்  எந்தவித அனர்த்தங்களும்   பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்