April 27, 2024

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னி பிரதேசத்தின் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது.

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னியின் மாத்தளன் பிரதேசத்தின் ‚புதுமாத்தளன்‘ பகுதியில் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து பேர்ண் மாநில ‚தூண் நகர நண்பர்கள்‘ இப்பணிக்கான நிதியினை நல்கினர்.
குடிநீருக்கான இடங்களை கண்டுபிடிப்பது என்பது கடினமான ஒரு பகுதியே மாத்தளன் பகுதி. இப்பகுதியில் 80 வரையான குடும்பங்கள் இரண்டு அடி அளவான சுற்றளவான இறப்பர் உருளைகொண்ட கிணற்றையே குடிநீருக்கு பயன்படுத்தினர். சிலவேளைகளில் நீர் ஊறும்வரை காத்திருந்து நீரள்ளினர்.
இது பற்றி வெளிக்கொணர்ந்திருந்தோம். இதனை அறிந்த சுவிட்சர்லாந்து தேசத்தின் பேர்ண் மாநில ‚தூண் நகர நண்பர்கள்‘ இப்பணியினை நிறைவேற்றி மக்களின் குடிநீர் பெறுகைக்கு கைகொடுத்தனர்.
பிரதேசத்தின் தாயார் ஒருவர் நீரள்ளி இந்த நற்பணியை தொடக்கினார்.
கிணற்றிற்கான சுகாதார பாதுகாப்பு ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
உதவிய உளங்களை வாழ்த்திடுவோம்.