September 26, 2023

கல்விப்புலத்தை தாக்கும் காவாலிகள்:எச்சரிக்கை!

கொரோனா காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப்  வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள்  காகாவாலி களால்  ஊடுருவப்பட்டுள்ளது.

*21×0765628297# என்ற  இலக்கத்தை பதியுமாறு சில பாடசாலைகளின் அதிபர்களை தந்திரோபாயமாக  செயற்படுத்தும் மர்ம நபர்கள் அப் பாடசாலையின் வட்சப் வைபர் குறூப்புக்குள் உள்நுழைந்து  பெண் ஆசிரியர்களின் தொலைத்தொடர்பு இலக்கங்களை அறிந்து பக்கங்களுக்குள் ஊடுருவுகின்றனர்.
குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தகவல் அனுப்புவதை போல் தகாத படங்களையும் செய்திகளையும் ஆசிரியர்களின் வாட்சப் வைபர் தளங்களுக்கு அனுப்பப்படுகிறது.
குறித்த சம்பவம் பருத்தித்துறை,கிளிநொச்சி,வவுனியா  ,பூநகரி பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிபர்கள் ஆசிரியர்கள் மனநீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே வடமாகாணத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு யாராவது தொடர்புகொண்டு தமது தொலைபேசிகளில் இரகசிய பதிவிறக்கங்கள் பதியுமாறு கோரினால் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வடமாகாண அதிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது