Juli 20, 2024

ஆச்சியின் பேத்தி அபிராமி

மனோரமாவுடன் பேத்தி அபிராமி

மனோரமாவுடன் பேத்தி அபிராமி

„இன்னிக்கு ஆத்தாவோட 83-வது பிறந்தநாள். எங்க நினைவுகள்ல மட்டுமில்லாம, எங்க குழந்தைங்க முகத்துலேயும் ஆத்தாவோட ஞாபகங்கள் அப்படியே பசுமையா இருக்கு.“

தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஆச்சி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள். அவரின் பேத்தி அபிராமியிடம், ஆச்சியின் நினைவுகளைப் பகிரச் சொல்லி கேட்பதற்காக போன் செய்தோம். ‚டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்று கணீர் குரலில் மனோரமா ஆச்சியின் பாடல், காலர் டியூன் ஒலிக்க, தொடர்கிறார் பேத்தி.

மனோரமா

மனோரமா

„மத்தவங்களுக்கு அவங்க ஆச்சி. பேரன், பேத்திகளான எங்களுக்கு ஆத்தா. ஆனா, தன் பேத்தி, பேரன்கிட்ட எப்படிப் பாசமா நடந்துக்கிட்டாங்களோ அதேமாதிரிதான் மத்த வீட்டுப் பிள்ளைங்ககிட்டேயும் பாசமா இருப்பாங்க. அதாவது சொந்த பேரன், பேத்திக்கிட்ட என்ன லவ் காட்டுவாங்களோ அதே லவ். ஆத்தாவோட சூப்பர் குவாலிட்டின்னே இதை நான் சொல்லுவேன்“ என்றவர் தொடர்ந்தார்.

„இன்னிக்கு ஆத்தாவோட 83-வது பிறந்தநாள். எங்க நினைவுகள்ல மட்டுமில்லாம, எங்க குழந்தைங்க முகங்களிலும் ஆத்தாவோட ஞாபகங்கள் அப்படியே பசுமையா இருக்கு.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, டி.வி-யில பழைய படங்களை பாட்டியோட சேர்ந்து பார்த்ததெல்லாம் ஏதோ இப்ப நடந்த மாதிரிதான் இருக்கு. எனக்கென்னவோ ஆத்தா என்னை விட்டுப் பிரிஞ்ச உணர்வே ஏற்படல.

மனோரமாவுடன் பேத்தி அபிராமி

மனோரமாவுடன் பேத்தி அபிராமி

ஆத்தா அவுட்டோர் ஷூட்டிங் இல்லாம வீட்ல இருக்குறப்போ, நைட்ல அவங்க பக்கத்துல படுத்துக்கிட்டு கதை கேட்போம். அவங்க மன்னார்குடியில பிறந்து வளர்ந்தது, கஷ்டப்பட்டது, நாடகத்துல நடிச்சது, சினிமாவுக்கு வந்தது, கல்யாண வாழ்க்கை, அதுல கஷ்டப்பட்டதுன்னு எல்லா விஷயங்களையும் கதை மாதிரி சொல்லுவாங்க. அதெல்லாம் மனசைத் தொடுற மாதிரி இருக்கும்“ என்கிற அபிராமி, அடிப்படையில் ஒரு சைக்காலஜிஸ்ட்.

‚ஆத்தா கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க ப்ளீஸ்’னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன்.

பேத்தி அபிராமி

இளமையில் மனோரமா

இளமையில் மனோரமா
1969-ல் மனோரமா விகடனுக்கு அளித்த ஒரே ஒரு போட்டோ... என்ன ஸ்பெஷல் தெரியுமா?! #VikatanOriginals

Also Read

1969-ல் மனோரமா விகடனுக்கு அளித்த ஒரே ஒரு போட்டோ… என்ன ஸ்பெஷல் தெரியுமா?! #VikatanOriginals

„ஆத்தாவோட கடைசிக் காலம் வரைக்கும் நான் ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஆத்தாவைப் பார்க்க ரசிகர்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. அப்பதான் ரசிகர்கள்கிட்ட பேசிட்டு வீட்டுக்குள்ள வந்திருப்பாங்க. மறுபடியும் ரசிகர்கள் வந்துருவாங்க ஆத்தா தன்னோட கால்வலி, சோர்வு பத்தியெல்லாம் யோசிக்காம மறுபடியும் ரசிகர்களை மீட் பண்ணப் போவாங்க. ‚எனக்கு முடியல, ரசிகர்கள் என்னைப் பார்க்க வரவேண்டாம்னு தவிர்த்ததுமில்ல, வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு வெளியே வர முடியலைன்னு சொன்னதுமில்ல. தன்னை நேசிச்ச ரசிகர்கள் மேல அவ்வளவு உயிரா இருந்தாங்க ஆத்தா. நான்கூட, ‚ஆத்தா கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க ப்ளீஸ்’னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன்.

வீட்டுக்குள்ள ஆத்தா ஒரு செலிபிரிட்டியா நடந்துக்கிட்டதே இல்ல. அவங்க பிஸியா இருந்தபோதும் எல்லா பாட்டிகளையும்போல, பேரப்பிள்ளைங்களை இடுப்புல தூக்கி வெச்சுக்கிட்டு சாப்பாடு ஊட்டியிருக்காங்க, கதை சொல்லியிருக்காங்க. காலேஜ்லேருந்து நான் வரும் வரைக்கும் ஆத்தா லஞ்ச் சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்பாங்க. அதெல்லாம் இப்ப நினைச்சாலும் சந்தோஷமாகவும் இருக்கு, அழுகையும் வருது“ என்கிறார் ஆச்சியின் பேத்தி.

manorama

manorama

„எங்க வீட்ல ஆத்தாவோட பிறந்தநாள் ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட கடைசி பிறந்தநாள் வரைக்கும் கேக் வெட்டிதான் கொண்டாடிட்டிருந்தோம். அப்பல்லாம் ஆத்தா, குழந்தை மாதிரி சந்தோஷமா மாறிடுவாங்க. ஆத்தாவோட கடைசி பர்த்டேவுக்கு ஐஸ்கிரீம் கேக் கட் பண்ணது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. லவ் யூ ஆத்தா… ஐ மிஸ் யூ ஸோ மச்“ என்ற அபிராமியின் குரல் பாசத்தில் சிலிர்க்கிறது.