Juli 20, 2024

துயர் பகிர்தல் சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ்

தாயகம் வவுனியாவைப்பிறப்பிடமாகவும் ,
புங்குடுதீவை புகுந்த மண்ணாகவும்
சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட
சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ்
Swiss Bern (Sumiswald)
அன்னை மடியில் 20.11.1983
ஆண்டவன் அடியில் 24.05.2020
உன்முகத்தில் புன்னகை தவிர வேறொன்றில்லை!
உன் பண்பில் உலகம் பங்கெடுத்தல் நீடுதகும் !
உன் பக்தியில் இறைக்கும் பொறாமை மிகும் !
உன் இழப்பு ஈடுசெய்ய முடியாதது தங்கையே !
நேற்றிருந்தாய் நெஞ்சமெங்கும் நிறைந்திருந்தாய்
சேற்றில் செந்தாமரையாய் நீ மலர்ந்திருந்தாய்
காற்றில் கலந்துநீ கண்மூடிப்போனாயோதங்காய்
ஈற்றில் சக்தியோடு சங்கமமானாயோடி லோஜினா
புகுந்தவீட்டு ஊர்உறவு புலம்பித்தவிக்குதடி
புலம்பெயர்ந்த உறவுகளும் கூடியிங்கு அழுததடி
புண்ணியம் செய்தோர்க்கே மரணம் சடுதியடி
புல் நுனியும் விழி கசியுதடி பூமகளே போய்வாடி
பெற்றவர்கள் புலம்பியழ , பெயர்கூறிக் கதறியழ
பெற்றபிள்ளை இருவருமே பேதலித்து குலுங்கியழ
பற்றுவைத்த கண்ணாளன் பரிதவித்து .. நிலைகுலைய!
வெற்றுடலாய் கிடக்கிறாயே வேகுதடி நெஞ்சமெல்லாம் !
ஆண்டாண்டு தோறுநாம் அழுதே புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம் மாநிலத்தே என்றே
சான்றுபல சொன்னாலும் , நீ சடுதியாய் கண்மூட
சத்தியமாய் சொல்லுகிறோம் சாவுக்கு சா வரட்டும்.
அன்பு மனம் கொண்ட உன்னை ஆதிசக்தி அணைத்தனளோ?
அத்தனை அன்னையைத்தாண்டி அவசரமாய்
செம்பூவாய் அம்மாவின் திருவடி வீழ்ந்தாயோ ?
சத்தியவள் திருவடியில் பக்தியோடு
கைகூப்பி பணிந்தே வேண்டினோம் ஒன்றாய் ! -உனக்கு
முத்தியை நிரந்தரமாய்த் தந்திடவேண்டி !
உன் பிரிவில் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் உள்ளங்கை பற்றி உளமாரத் துயர்பகிர்கின்றோம் .
ஓம்சாந்தி !ஓம்சாந்தி !! ஓம் சக்தி !!!
இங்கனம் :
சுவிஸ்மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு வார வழிபாட்டு மன்றங்களின் தலைமைப்பீடம் சார்பாக
சுவிஸ் சுரேஷ்
Aum Sakthi VEREIN In Der Schweiz
Switzerland
முக்கிய குறிப்பு :அன்பு உறவுகள் செவ்வாய்கிழமை முடிந்தவரை 16.00-19.00 மணிவரை கலந்துகொள்ளவும் ! புதன்கிழமை தகனக் கிரியைக்கு உறவினர் 40 பேருக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக ! தம்பி சாஜிராய் தகவல் தந்துள்ளார் !