அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு: பேர்லினில் மக்கள் போராட்டம்!!
யேர்மனியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் பேர்லினில் அமைந்து்ளள சான்ஸ்சிலரின் அலுவலத்திற்கு வெளியே ஒன்று கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
போராட்டத்திற் கலந்துகொண்டவர்களில் சிலர் ‚ஏழைகளுக்கு உடனடி உதவி‘, ‚ஆரோக்கியமான உணவு தேவை‘, ‚வறுமையை ஒழிப்போம்‘ என்ற பதாதைகளைத் தாக்கியவாறு நின்றனர்
ஜேர்மனியில் ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 50 வருட உயர்வை எட்டியது. மே மாதம் 8.7 விழுக்காட்டிலிருந்து ஆகஸ்ட் மாதம் 8.9 விழுக்காட்டடை எட்டியது.
1973 மற்றும் 1974 இல் இருந்ததை விட எண்ணெய் நெருக்கடி அதிகரித்துள்ளது
போராட்டத்தில் கலந்கொண்ட எதிர்ப்பாளர் ஒருவர் தெரிவிக்கையில்:
நாங்கள் இப்போது கழுத்துவரையிலான தண்ணீரில் இல்லை. நாங்கள் மூழ்கும் நிலையில் இருக்கின்றோம். எங்களால் வாழ்க்கையைத் தொடரமுடியவில்லை. எங்களுக்கு உதவி தேவை என்றார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மக்களுக்கு வீட்டுவசதி மற்றும் கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கு உதவுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
வறுமை நெட்வொர்க் சங்கத்தின் தலைவர் மைக்கேல் ஸ்டீஃபெல் கூறுகயைில்:
சமூகம் மிகவும் பிளவுபட்டு வருகிறது. தொற்றுநோயில் நீங்கள் அதை கவனித்தீர்கள். நியூகோல்னில் ஐந்து நபர்களுடன் இரண்டு அறைகள் கொண்ட பிளாட் மட்டுமே இருந்தது. உக்ரைன் அல்லது சிரியாவில் இருந்து வந்து ஒரு அறையில் ஐந்து பேருடன் ஒரு விடுதியில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுதான் வறுமை. என்றார்.
R+V Versicherung, ஒரு ஜெர்மன் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு வருடாந்த அறிக்கை, நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மக்களின் முக்கிய கவலையாக இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து மலிவு விலையில் வீடுகள் இல்லாதது மற்றும் நாட்டின் மோசமான பொருளாதாரம் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு, கோவிட்-19 காரணமாக வரி உயர்வு குறித்து ஜேர்மனியர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.