November 22, 2024

பிரித்தானியாவில் பாலத்தில் ஏறிப் போராட்டம்: M25 டார்ட்ஃபோர்ட் கிராசிங் மூடப்பட்டது

டார்ட்ஃபோாட்  அமைந்துள்ள ராணி எலிசபெத் II பாலத்தில் காலநிலை மாற்ற பிரச்சாரக் குழுவான ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பைச் சோ்ந்த இரு ஆதரவாளர்கள் ஏறி போராட்டத்தை நடத்தினர். அவர்கள் பாலத்தின் உயரத்தில் 24 மணி நேரம் இருந்து போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

காவல்துறைக்கு புகார்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து லண்டனுக்கு கிழக்கே M25 ஐப் பயன்படுத்தி போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகள் டார்ட்ஃபோர்ட் சுரங்கப்பாதை வழியாக அமைக்கப்பட்டன.

புதிய அரசாங்க எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் கூறியது.

1.7 மைல் (2.8 கிமீ) நீளம் கொண்ட பாலம், எசெக்ஸ் முதல் கென்ட் வரை M25 லண்டன் ஆர்பிடல் மோட்டார்வேயை இணைக்கும் A282 இல் போக்குவரத்தை தெற்கு நோக்கி அழைத்துச் செல்கிறது. டார்ட்ஃபோர்ட் சுரங்கப்பாதை வழக்கமாக வடக்கு நோக்கி போக்குவரத்தை கொண்டு செல்கிறது.

எசெக்ஸ் காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் பென்-ஜூலியன் ஹாரிங்டன் கூறுகையில்:-

இது மிகவும் ஆபத்தான மற்றும் கடினமான சூழல். அவர்களுக்குப் பைத்தியம் என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் விரக்தியடைந்தேன். உயரத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதில் உள்ள சிக்கல்களின் காரணமாகத் தீர்க்க சிறிது நேரம் ஆகலாம். இன்று மாலை பாலத்தில் போக்குவரத்தில் நொிசல் காரணமாக மூடப்பட்டிருக்கும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலைகள் கிழக்கில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 8 மைல் நொிசல் ஏற்பட்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert