தற்கொலை டிரோன்களால் உக்ரைன் உட்கட்டமைப்புகளை அழிக்கும் ரஷ்யா!!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் ஆயுத, பொருளாதார உள்ளிட்ட அனைத்து உதவிகளை வழங்கி வருகின்றன
அண்மைய காலமாக போரில் ரஷ்யாவால் கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைந்து வைக்கப்பட்டிருந்த நிலங்களை உக்ரைனியப் படைகள் மீட்டு வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் கிரீமியா நிலத்துடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தை உக்ரைனிய புலாய்வுப் பிரிவினர் குண்டு வைத்தபோது பாலம் பெரும் தேசத்துக்கு உள்ளானது
இத்தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ஒரு நாளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது.
அதனைத் தொடருந்து ஈரானில் தயாரிக்கப்படும் கமிக்கேஸ் டிரோன்களை என்று அழைக்கப்படும் ஆளில்லாாத தற்கொலை டிரோன்களை ரஷ்யா அதிகளவு பாவித்து உக்ரைன் தலைநகர் உட்பட உக்கரைனின் நகரங்கள் மீது மின்சார விநியோகம், போக்குவரத்து உட்பட உட்கட்டமைப்புகளை ரஷ்யா அழித்து வருகிறது
இன்று தலைநகர் கீவ்வில் குடியிருப்புகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதலிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கீவ்வில் மூவரும் சுமி நகரில் 4 பேரும் உயிரிந்துள்ளனர்.
புதிய தாக்குதல்கள் இற்று கீவ் (Kyiv), டினிப்புரோ (Dnipro) மற்றும் சுமி (Sumy) ஆகிய பகுதிகளைத் தாக்கியுள்ளது.
உக்ரைன் முழுவதும் உள்ள இராணுவ இலக்குகள், இராணுவ கட்டளை மையங்கள், மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்புகள், எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது உயர் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
உக்ரேனிய நகரங்கள் மீதான சமீபத்திய தாக்குதலில் அனைத்து நியமிக்கப்பட்ட இலக்குகளையும் தாக்கியதாகவும், தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் தனது பாதுகாப்பை மீறும் முயற்சியை எதிர்கொண்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அதன் நாளாந்த செய்தியாளர் மாநாட்டில் கூறியது.
உக்ரைனின் துணை உள்துறை அமைச்சர் யெவ்ஹான் யெனின் கருத்துப்படி, சுமியில் எரிசக்தி உற்பத்தி செய்யும் வசதி பாதிக்கப்பட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எரிசக்தி தொடர்பான அனைத்து வசதிகளுக்காகவும் ரஷ்யா வேட்டையாடுகிறது“ என்று திரு யெனின் எச்சரித்தார். அவர்கள் ஆற்றல் துறையில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்றார்.
துறைமுக நகரமான மைகோலைவ் ( Mykolaiv) இல், சூரியகாந்தி எண்ணெய் தொட்டிகள் தற்கொலை ட்ரோன்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக நகர மேயர் ஒலெக்சாண்டர் சென்கெவிச் (Oleksandr Senkevich) தெரிவித்தார். இதற்காக மூன்று தற்கொலை டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக மேயர் மேலும் தெரிவித்தார்.