எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரையில் பயணித்த அருட்தந்தை!
நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த புலம்பெயர் நாட்டவரான மருத்துவ நிபுணர் சந்திரபோல் இந்த குதிரை வண்டி சேவையினை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் காலை 8 மணி தொடக்கம் 11 மணிவரையும் மாலை 3 மணி தொடக்கம் 6 மணிவரையும் சுமார் 2 கிலோ மீற்றர் துாரத்திற்குள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும் வியப்புடன் அவதானித்தனர்.