November 25, 2024

யாழில் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிற்றுந்து உரிமையாளர்கள மற்றும் ஓட்டுநர்களினால் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் பருத்தித்துறை டிப்போவில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இரவு நேரங்களில் எரிபொருளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வியாபாரிக்களுக்கு வழங்கப்படுவதாகவும் தமக்கு எரிபொருள் வழங்குவதில்லை மற்றும் எமக்கு டீசல் வழங்க இழுத்தடிப்புகள் செய்து உரிய ஒழுங்கில் டீசல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இன்று குறித்த போராட்டம் நடந்தது.

பருத்துறை பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை சிற்றுந்துகளை பிரதேச செயலகத்திற்கு தள்ளிச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே  கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு டீசல்கள் வழங்கப்படுவதில்லை என சிற்றுந்து ஓட்டுநர்கள் போராட்டம் நடாத்தியிருந்தனர். அவர்களுடன் யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் பேச்சுக்களை நடாத்தி உரிய ஒழுங்கில் டீசல் பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தார்

இந்தநடவடிக்கையை அடுத்தே பருத்துறையில் போராட்டம் நடந்திருந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert