பஸ் கட்டணமும் ஏறியது
இலங்கையில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும். ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.