November 22, 2024

வேகமாகப் பரவும் குரங்கு அம்மை: சுவிசுக்கும் வந்தது!

இஸ்ரேல் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் வந்துள்ளமை முதல் முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அண்மையில் பயணம் மேற்கொண்ட ஒருவர் மீது இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என இரு நாடுகளும் தெரிவித்தன.

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெடித்ததில் 80 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை நோய் வழங்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்கு அம்மை நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இருந்துவருகிறது. குரங்கு அம்மை எளிதில் மக்களிடையே பரவுவதில்லை. அத்துடன் ஆபத்தும் குறைவாகவே இருக்கிறது எனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள்.

உலக சுகாதார அமைப்பு 50 சந்தேகமான வழங்குகளை விசாரித்து வருகிறது. ஆனால் அவர்கள் எந்தெந்த நாடுகள் என்பதை குறிப்பிடவில்லை.

குரங்கு அம்மை நோய் முதல் முதலில்  இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இந்நோய் இருப்பதை அங்குள்ள பொது சுகாதார நிறுவனங்கள் அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன.

பிரித்தானியரிவில் இதுவரை 20 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவிக்கையில்:

நாங்கள் தினசரி அடிப்படையில் அதிகமான வழக்குகளைக் கண்டறிந்து வருகிறோம். வைரஸ் தற்போது சமூகத்தில் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்ற எவருடனும் தொடர்பு இல்லாத வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் பொது மக்களுக்கான ஆபத்து „மிகவும் குறைவாக உள்ளது

இதுவரை வழக்குகள் பெரும்பாலும் சில நகர்ப்புறங்களில் மற்றும் ஓரினச்சேர்க்கை அல்லது இருபாலின ஆண்களிடையே காணப்படுகின்றன என மருத்துவர் ஹாப்கின்ஸ் கூறினார்.

குரங்கு அம்மை நோயைக் தடுப்பதற்க குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் இல்லை என்றாலும், பல நாடுகள் பெரியம்மை தடுப்பூசிகளை சேமித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளன. இவை இரண்டு வைரஸ்களும் மிகவும் ஒத்திருப்பதால் தொற்றுநோயைத் தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் தெரிவித்திருக்கின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert