யாழ்.பல்கலையிலும் நினைவேந்தல்!
யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிற்பகல் 2.20 மணிக்கு 2 நிமிட அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த யாழ். பல்கலை மாணவன் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
ஏனைய சுடர்களை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், கல்விசார பணியாளர், மாணவர்கள் ஏற்றினர்.
தொடர்ந்து நினைவுத்தூபிக்கு மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இதன் போது இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த உறவுகள் கண்ணீர் சிந்தி அஞ்சலித்தனர்