November 24, 2024

இலங்கைக்கு இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி உதவிய இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது 11 ஆயிரம் டன் உணவுப்பொருள் வழங்கியது.

இதன்படி ஜனவரியில் இருந்து இதுவரை ரூ.7,500 கோடிக்கு அத்தியாவசிய பொருள் உதவியும், ரூ.7,000 கோடிக்கு எரிபொருள் மற்றும் நாணயமாற்று உதவியும், ரூ.7,500 கோடிக்கு ஆசிய யூனியன் கூட்டமைப்பு சார்பில் இந்தியா உதவி வழங்கி இருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியதாவது:-

எரிபொருள் தேவைக்காக ஏற்கனவே வாங்கிய கடனில் ரூ.750 கோடி மட்டுமே மீதி உள்ளது. அதை வைத்து 2 தடவை கப்பல் மூலம் எரிபொருள் வாங்கலாம். மேலும் எரிபொருள் தேவைப்படுவதால், ரூ.1,500 கோடி கடனுதவி வாங்கி இருக்கிறோம்.

இதைத்தவிர, மேலும் ரூ.3 ஆயிரத்து 750 கடனுதவி கேட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert