November 24, 2024

சஜித்தும் கொள்ளையன்:அனுர குற்றச்சாட்டு!

2015 – 2019  காலப்பகுதியில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 3000 மில்லியன் ரூபாவை கமுக்கமாக அமுக்கியுள்ளதை இன்று (03) ஜே.வி.பி. தலைவர்  அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு அம்பலப்படுத்தினார். 

கலாசார நிதியத்திலோ அல்லது அதன் அங்கத்தவர்களின் அனுமதி பெறாமல், 146 செலவு தலைப்புகளில் எந்தவிதமான அங்கிகாரமும் பெறாமல் சஜித் பிரேமதாச 3000 மில்லியன் ரூபாவை திருடியுள்ளார்

15.11.2019 இல் இவ்வாறு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17.11.2019 இடம்பெறவிருந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் திடீரென பணிப்பாளர் சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரசிங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகிலவிராஜ், மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த ஆகியோர் பணிப்பாளர் சபையைச் சேர்ந்தவர்கள்.

தலைவர் ரணில் விக்ரமசிங்க, தம்பர அமில பிக்கு, அகிலவிராஜ் கையொப்பமிடவில்லை. பிரதமரின் செயலாளர் D.S.M. ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

இதன்மூலம் எந்தவொரு அனுமதியையும் பெறாமல் சஜித் பிரேமதாச மக்களின் பணத்தை திருடியைமை அம்பலமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert